சிறுமிகள் மீதான வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கும் 2 சட்ட மசோதாக்கள்: தண்டனை விவரம் என்ன?

2 hours ago 3

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை தாக்குதல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் 2 சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். 2 மசோதாக்களும் இன்று விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்படுகின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டுவந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய 2 சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிமுகம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

Read Entire Article