சென்னை: பிரபல மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் திருவள்ளுவர் மணல் சிற்பம் தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்
திருவள்ளுவர் தினம் புதன்கிழமை (ஜன.15) கொண்டாடப்பட்டதை முன்னிட்டு ஒடிசாவின் புகழ்பெற்ற மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை புரி கடற்கரையில் மணல் சிற்பமாக வடித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.