சிறிய டிராக்டர் மூலம் உழவு பணி பெரம்பலூர் நகராட்சி சாதாரண கூட்டம்

1 week ago 2

பெரம்பலூர், ஜன.31: பெரம்பலூர் நகராட்சியின் சாதாரணக் கூட்டத்தில் அடிப்படை வசதி மற்றும் வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பெரம்பலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில், நகர்மன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ராமர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் நிறை வேற்றவேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை விடுத் துப் பேசினர். பின்னர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் பேசுகையில், கவுன் சிலர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், சாலை மேம்பாட்டுப் பணிகள் போன்றவற்றிற்கு முன்னு ரிமை அளித்து, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பெரம்பலூர் பழைய பஸ்டாண்ட் அருகில் உள்ள பழைய தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, அந்தப்பகுதியில் புதிதாக 72 காய்கறிக் கடைகள் கட்டுவது, நகராட்சி அலுவலக வளாகத்தில் முன் பகுதியில் 8 கடைகள் ரூ 40 லட்சம் செலவில் கட்டுதல், குடிநீர் விநியோகம் செய்ய குழாய்பதித்து குடிநீர் விநியோகம் செய்வது, குடிநீர் தேவைப்படும் வார்டுகளுக்கு குடிநீர் குழாய் பைப் அமைத்தல், குடிநீர் விநியோகத்திற் கான நடவடிக்கை எடுத்தல், பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளுதல் மற்றும் பல் வேறு பணிகளை மேற் கொள்ளுதல் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளர் சீனிவாச மூர்த்தி, உதவி பொறியா ளர் சரவணன், மேலாளர் அசோக்குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிறிய டிராக்டர் மூலம் உழவு பணி பெரம்பலூர் நகராட்சி சாதாரண கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article