சிறப்பு முகாமில் விண்ணப்பித்த புதிய வாக்காளர் வீடுகளில் தேர்தல் அலுவலர் ஆய்வு

2 months ago 10

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2025, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் வசதிக்காக 1.1.2025 என்ற நாளை தகுதி நாளாக கொண்டு, சிறப்பு முகாம்களை நடத்திட அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கள விசாரணை செய்யப்பட்டது.

கள விசாரணை செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாய்வு செய்திடும் பொருட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் டவர் பூங்கா பகுதியில் விண்ணப்பித்த வாக்காளர்களின் வீடுகளுக்கு கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ம.பிரதிவிராஜ், நேற்று நேரில் சென்று, வாக்காளர்களின் விண்ணப்பப் படிவத்தின் உண்மை நிலைகள் குறித்து கேட்டறிந்து சான்றுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.சுரேஷ் மற்றும் சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சிறப்பு முகாமில் விண்ணப்பித்த புதிய வாக்காளர் வீடுகளில் தேர்தல் அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article