சிரியா எல்லையில் உள்ள பகுதிகளை கைப்பற்ற ராணுவத்துக்கு நெதன்யாகு உத்தரவு

3 months ago 14
சிரியாவில் பஷார் அல்-அசாத்தின் அரசை கிளர்ச்சியாளர்கள் அகற்றியதை, வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டார்.  சிரியா எல்லையில் உள்ள இஸ்ரேல் கண்காணிப்பு மையத்துக்கு வந்த அவர், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்ய, சிரியா எல்லையில் ஐ.நா கண்காணிப்பில் உள்ள பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேலிய ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்த நெதன்யாகு, சிரியாவுக்கு ஆதரவளித்த ஈரான் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக சிரியா அரசு அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  
Read Entire Article