
சென்னை,
'வாணி ராணி', 'பனி விழும் மலர் வனம்', 'கயல்', 'கெட்டி மேளம்' உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பிரபாகரன். இவர் சென்னை முகலிவாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த அவர், சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். இதற்கிடையில் நெஞ்சு வலிப்பதாக அவர் துடித்ததை தொடர்ந்து, குடும்பத்தினர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சின்னத்திரை தொடர்களில் கடந்த 15 வருடங்களாக அப்பா கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர் பிரபாகரன்.
சமீபத்தில் சின்னத்திரை நடிகரான சஹானா ஸ்ரீதர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது பிரபாகரனின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.