
சென்னை,
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 23 ஆண்டுகளைக் கடந்துள்ளார் நடிகர் தனுஷ். தற்போது நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் வலம் வருகிறார்.
2002-ல் வெளியான "துள்ளுவதோ இளமை" படம் மூலம் அறிமுகமான தனுஷ், பல வெற்றிப் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் தனுஷ் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது அவர் 'குபேரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
நடிகர் தனுஷ் 23 ஆண்டுகளை கடந்திருக்கும்நிலையில், முக்கிய அப்டேட் ஒன்றை இப்படக்குழு பகிர்ந்துள்ளது. அதன்படி, இப்படத்தில் தனுஷ் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.