சித்தூரில் பிரசித்திபெற்ற காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ₹1.24 கோடி உண்டியல் காணிக்கை

3 weeks ago 6

*45 கிராம் தங்கம்,859 கிராம் வெள்ளியும் கிடைத்தது

சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ரூ.1.24 கோடி, தங்கம் 45 கிராம், வெள்ளி 859 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தினர்.

சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வர சித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற உண்டியல் காணிக்கை, நன்கொடை ஆகியவற்றை செலுத்துக்கின்றனர். மேலும் கோயிலில் உள்ள உண்டியலில் தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தி செல்கிறார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோயில் நிர்வாகத்தினர் 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கோயில் செயல் அலுவலர் குரு பிரசாத் தலைமையில் கோயிலில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை என்ணும் பணி நடந்தது.

இதில் 22 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் ரூ.1 கோடியே 24 லட்சத்து 94 ஆயிரத்து 275 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அதேபோல் தங்கம் 45 கிராம், வெள்ளி 859 கிராம், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளார்கள்.

கோ பராமரிப்புக்கு வைக்கப்பட்ட உண்டியலில் ரூ.13870 காணிக்கையாக செலுத்தி உள்ளார்கள். அன்னதானத்திற்கு வைக்கப்பட்ட உண்டியலில் ரூ.21,872 காணிக்கை செலுத்தி உள்ளனர்.

அதேபோல் வெளிநாட்டு பணம், அமெரிக்கா – 1011, டாலர்கள் ஆஸ்திரேலியா – 170, டாலர்கள் இங்கிலாந்து – 10 பவுண்டுகள், யுஎஇ 135 திராம்ஸ், சிங்கப்பூர் – 60, டாலர்கள் யூரோ 50 என பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்று கோயில் செயல் அலுவலர் குரு பிரசாத் தெரிவித்தார்.

இதில் கோயில் இணை செயல் அலுவலர்கள் எஸ்.வி. கிருஷ்ணா ரெட்டி, ரவீந்திர பாபு, வித்யாசாகர் ரெட்டி, ஹரி மாதவ் ரெட்டி, கோயில் மேற்பார்வையாளர்கள் – கோதண்டபாணி, ஸ்ரீதர் பாபு, ரங்கசாமி, கோயில் இன்ஸ்பெக்டர் சுப்பாரெட்டி மற்றும் ஏராளமான தேவஸ்தான ஊழியர்கள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

The post சித்தூரில் பிரசித்திபெற்ற காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ₹1.24 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article