திருவள்ளூர் மற்றும் 8 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு

3 hours ago 1

சென்னை: தர்மபுரி, திண்டுக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், நெல்லை, திரூவாருர் ஆகிய 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த உத்தரவை தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று ெவளியிட்டுள்ளார். அதன் விவரம்: ஈரோடு கூடுதல் கலெக்டராக இருந்த ஆர்.சதீஷ் தர்மபுரி கலெக்டராகவும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய செயல் இயக்குனர் எஸ்.சரவணன் திண்டுக்கல் கலெக்டராகவும், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை துணை செயலாளர் எம்.பிரதாப் திருவள்ளூர் கலெக்டராகவும், மதுரை மாநகராட்சி கமிஷனர் சி.தினேஷ்குமார் கிருஷ்ணகிரி கலெக்டராகவும், நகராட்சி நிர்வாக இணை ஆணையர் எஸ்.ஷேக்அப்துல் ரஹ்மான் விழுப்புரம் கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் கலெக்டர் கே.தர்மபகாராஜ் திருவண்ணாமலை கலெக்டராகவும், பேரிடர் மேலாண்மை இயக்குனர் வி.மோகனச்சந்திரன் திருப்பத்தூர் கலெக்டராகவும், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆர்.சுகுமார் திருநெல்வேலி கலெக்டராகவும், தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் இயக்குநர் கே.சிவசவுந்தரவல்லி திருவாரூர் கலெக்டராகவும், தர்மபுரி கலெக்டர் கே.சாந்தி சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராகவும், திண்டுக்கல் கலெக்டர் எம்.என்.பூங்கொடி வணிகவரி இணை ஆணையராகவும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா தொழில்நுட்ப கல்வி ஆணையராகவும், எல்காட் நிர்வாக இயக்குனர் ஆர்.கண்ணன் கால்நடை பராமரிப்பு துறை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லலிதாதித்ய நீலம் நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும், விழுப்புரம் கலெக்டர் சி.பழனி இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராகவும், தமிழ்நாடு சாலை திட்ட இயக்குனர் எஸ்.ஏ.ராமன் சென்னை-கன்னியாகுமரி தொழில்துறை வழித்தட திட்ட இயக்குநராகவும், கிருஷ்ணகிரி கலெக்டர் கே.எம்.சரயு அரசு (நெறிமுறை) பொதுத்துறை துணை செயலாளராகவும், விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ்சய் நாராயணன் இ-ஆளுமை இணை இயக்குனராகவும், செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர் ஆர்.அனாமிகா ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துணை ஆணையராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சிகி தாமஸ் வைத்தியன் பேரிடர் மேலாண்மை ஆணையராகவும், மத்திய அரசு பணியில் இருந்து திரும்பியுள்ள ஆர்.ஜெயா பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மை செயலாளராகவும், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணை செயலாளர் எஸ்.பி.அம்ரித் கூட்டுறவு சங்கங்கள் கூடுதல் பதிவாளராகவும், பழனி சப்-கலெக்டர் எஸ்.கிஷண்குமார் சிதம்பரம் சப்-கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளராகவும், பொருளாதாரம் மற்றும் புள்ளியல் ஆணையர் எஸ்.கணேஷ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சிறப்பு செயலாளராகவும், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஷங்கர் லால் குமாவத் உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளராகவும், வணிக வரிகள் இணை ஆணையர் துர்கா மூர்த்தி (சென்னை) தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் (சேலம்) நிர்வாக இயக்குனராகவும், திருவள்ளூர் கலெக்டர் டி.பிரபுசங்கர் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநராகவும், திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (எல்காட்) நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று திருவண்ணாமவை கலெக்டர் டி.பாஸ்கர பாண்டியன் தமிழ்நாடு சாலைத்துறை திட்டம்-II இயக்குனர் (இவர் சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட இயக்குனராகவும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் செயல்படுவார்). பொதுத்துறை துணை செயலாளர் ஜே.இ.பத்மஜா விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகவும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குனர் சித்ரா விஜயன், மதுரை மாநகராட்சி ஆணையராகவும், தர்மபுரி கூடுதல் ஆட்சியர் கவுரவ் குமார் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குனராகவும், கைத்தறி துறை இயக்குனர் ஏ.சண்முகசுந்தரம் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராகவும், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் டாரேஸ் அகமது வழிகாட்டுதல் நிர்வாக இயக்குனராகவும், துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ் கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்க துறை செயலாளராகவும், துணை முதல்வரின் செயலாளர் எம்.ஆர்த்தி கூடுதலாக தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் இனி இந்த துறையுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திருவள்ளூர் மற்றும் 8 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article