சென்னை: தமிழகம் முழுவதும் ஆயுதப்படையில் பணியாற்றிய 32 ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி பணி நியமனம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு திருப்பூர் நகர போக்குவரத்து உதவி கமிஷனர், திருப்பூர் நகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த ஜானாகிராம் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த மோகன்குமார் மதுரை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த முத்துராமலிங்கம் ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், சேலம் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த ராஜ்குமார் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், சேலம் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த வெங்கடாசலம் கரூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த அப்பண்டராஜ் கடலூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த லோகநாதன் காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும்,
திருச்சி நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டராக இருந்த செங்குட்டுவன் திருச்சி மாவட்ட காவலர் பயிற்சி பள்ளி உதவி முதல்வராகவும், திருச்சி ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த ரத்தினம் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், சென்னை பெருநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த செல்லதுரை செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த லட்சுமணன் சேலம் காவலர் பயிற்சி பள்ளி உதவி முதல்வராகவும், சென்னை பெருநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த சுப்பிரமணியன் சென்னை பெருநகர பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், ஆவடி மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த முத்துராமன் தாம்பரம் மாநகர (கேட்டகிரி-2) உதவி கமிஷனராகவும், சென்னை வில்லிவாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக இருந்த ஜெயகுமார் வேலூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த பரந்தாமன் திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த ஜெயசங்கரன் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும்,
சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி இன்ஸ்பெக்டராக இருந்த மோனிகண்டகுமார் தாம்பரம் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த ராஜன் தேனி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், தாம்பரம் மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த சிவராமஜெயம் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், தேனி மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த செந்தாமரைக்கண்ணன் தூத்துக்குடி மாவட்ட காவலர் பயிற்சி பள்ளி உதவி முதல்வராகவும், ஈரோடு மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த ஞானவேல் விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், சென்னை சிபிசிஐடி-11. சைபர் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சிவக்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், சென்னை டிஜிபி அலுவலகம் ஸ்டோரேஜி இன்ஸ்பெக்டராக இருந்த பாபு வடசென்னை அனல்மின் நிலையம் பாதுகாப்பு அதிகாரியாகவும், ஆவடி மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த சி.பாபு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும்,
சென்னை பெருநகர ஆயுதப்படை மேட்டார் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் தாம்பரம் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், தாம்பரம் மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த கருணாகரன் தாம்பரம் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி இன்ஸ்பெக்டராக இருந்த குணசேகர் சென்னை தமிழ்நா மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பாதுகாப்பு அதிகாரியாகவும், ஆவடி மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த கமலகண்ணன் சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், சென்னை பெருநகர போக்குவரத்து இன்ஸ்பெக்டராக இருந்த இளங்கோவன் தென்காசி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், ஆவடி மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த அசோக்குமார் திருநெல்வேலி மாநகர போக்குவரத்து உதவி கமிஷனராகவும், தாம்பரம் மாநகர அயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த செல்லபாண்டியன் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் 32 பேருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு appeared first on Dinakaran.