திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், சித்துக்காடு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ10.19 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணை பெருந்தலைவருமான டி.தேசிங்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.) ராஜேந்திரன், (கி.ஊ.) வெங்கடேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரீகனா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் திமுக ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாகுமார், சாக்கரட்டீஸ், பிரவின்குமார், பிரதீப், முனிவேல், ராஜேஷ், அரி, மணிவண்ணன், சிபிசக்ரவர்த்தி பிரசாந்த், மதன், உள்பட பலர் கலந்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ திருமணம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் விவரங்களை கேட்டறிந்தார்.
The post சித்துக்காடு ஊராட்சியில் ரூ10.19 லட்சத்தில் அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.