சித்திரை முழுநிலவு மாநாடு: வாகனங்கள் மாற்று வழியில் செல்ல போலீஸ் அறிவுறுத்தல்

3 hours ago 2

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் மே 11-ம் தேதி சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் கோஷங்களை எழுப்பக் கூடாது, ஒலிப்பெருக்கி பயன்படுத்தக் கூடாது. காவல் துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Read Entire Article