
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நேற்று நடைபெற்றது.
12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், சித்திரை முழுநிலவு மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டை சிறப்பாகவும், ஒழுங்குடனும் நடத்துவதற்கு ஒத்துழைத்த, உறுதுணையாக இருந்த வடக்கு மண்டல காவல்துறை தலைவர், அதற்குட்பட்ட சரகங்களின் துணைத் தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், சார் ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த காவல்துறைக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநாட்டுக்கு ஒத்துழைப்பு நல்கிய தமிழக அரசுக்கும் நன்றிகள்!
#சித்திரைமுழுநிலவுமாநாடு' என தெரிவித்துள்ளார்.