
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,
பஹகல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் கண் முன்னே அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயமானது. மகள்களின், தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் அறிந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆரம்பம்தான். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, மக்களின் உணர்வு, மக்களின் வைராக்கியம். மே 7 காலை நமது மன உறுதியின் விளைவை உலகமே பார்த்தது. பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அனைத்தையும் தகர்த்தோம். யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள், பாரதம் இத்தகைய முடிவை எடுக்கும் என. தேசத்துக்கே முதலிடம் என்ற கொள்கைபடி, பயங்கரவாதிகள் முகாம்களை நொறுக்கினோம். பாரதத்தின் ஏவுகணைகள், ட்ரோன் விமானங்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தன என்றார்.