பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மூடா மாற்று நிலம் ஒதுக்கிய முறைகேடு புகாரில் சித்தராமையாவை விசாரிக்க உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா என்பவர் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் சித்தராமையாவை லோக்ஆயுக்தா விசாரிக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில், சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, நிலத்தை விற்ற தேவராஜ் ஆகியோர் மீது 17 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து லோக்ஆயுக்தா அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை லோக்ஆயுக்தா விசாரணைக்கு ஆஜரான கிருஷ்ணா, செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அந்த வழக்கில் சினேகமயி கிருஷ்ணாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
The post சித்தராமையா மீது வழக்கு தொடர்ந்தவருக்கு எதிராக பிடிவாரண்ட் appeared first on Dinakaran.