
சிங்கப்பூர்,
சிங்கப்பூரை சேர்ந்தவர் பரமேந்தர் (வயது 25). இந்தியரான இவர் சிங்கப்பூரில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நீச்சல் குளத்தில் பராமரிப்பாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் நீச்சல் குளத்திற்கு நீச்சல் கற்று கொள்ள வந்தார்.
அப்போது அந்த சிறுமியுடன் பரமேந்தர் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் சமூக வலைத்தள கணக்குகளை பரிமாறி கொண்டு ஆபாசமான குறுந்தகவல்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோர்ட்டு விசாரணையில் பரமேந்தருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.