சென்னை: சி.பி.எஸ்.இ.10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சமுக வலைதள பதிவில்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழ்நாடு, புதுவை உள்பட நாடு முழுவதும் இத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் அனைவரும் பதட்டமின்றி, வினாக்களை நன்றாகப் படித்து புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தெளிவாக விடைகளை எழுத வேண்டும். வெற்றியும், சாதனைகளும் உங்கள் பக்கமே! வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
The post சி.பி.எஸ்.இ.10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து appeared first on Dinakaran.