பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பனையன்படம் என்ற பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி முடிந்து மாணவ, மாணவியர் சாலையோரம் நடந்துசென்றுகொண்டிருந்தனர். மேலும் சிலர் அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சிமெண்டு ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற மாணவ, மாணவிகள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரிக்கு அடியில் சிக்கி 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசமான நிலையில் உள்ள சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அப்பகுதியினர், இந்த சாலையால் பல விபத்துகளும், உயிர் பலி ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.