சாலையோரம் உறங்கிய நபரின் செல்போன், பணம் மாயம்..

2 months ago 11
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் சாலையோரம் உறங்கிய நபரின் செல்போனையும், பணத்தையும் தெரு நாய் ஒன்று கவ்விச் சென்றது. டீ மாஸ்டரான மகேஷ், இரவில் கடை அருகே படுத்து உறங்குவதற்கு முன் தனது செல்போனையும், பணத்தையும் பிளாஸ்டிக் கவரில் சுற்றி தனது அருகே வைத்துள்ளார். காலை எழுந்தபோது பிளாஸ்டிக் கவர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த மகேஷ், யாரேனும் திருடிச் சென்றிருகக்கூடும் என நினைத்து சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது தெரு நாய் ஒன்று, உணவு இருப்பதாக நினைத்து பிளாஸ்டிக் கவரை கவ்விச் சென்றது தெரியவந்தது. 
Read Entire Article