தொண்டி, பிப்.15: கிழக்கு கடற்கரை சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இது குறித்து தொண்டி வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதன் அடிப்படையில் சாலைகளில் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் விதிக்க வேண்டும் என நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டது.
இது குறித்து மீண்டும் திருவாடானை வட்டார வளர்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட 47 ஊராட்சிகளுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் சாலைகளில் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
The post சாலையில் திரியும் கால்நடைகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு appeared first on Dinakaran.