திருப்பூர், ஜன.11: மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 ஐ ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று காலேஜ் ரோட்டிலுள்ள கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம் நடத்தினர். கோட்டத் தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அண்ணாதுரை, சிவக்குமரன் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் ராமன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மாநில செயலாளர் செந்தில் நாதன் நிறைவு செய்து வைத்து பேசினார். இதில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 ஐ ரத்து செய்ய வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைபடுத்தி உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு காலிப்பணியிடங்களில் பணி வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post சாலைப்பணியாளர்கள் நூதன போராட்டம் appeared first on Dinakaran.