சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

3 months ago 22

திருச்செங்கோடு, அக்.4: நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு உட்கோட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் ஓமலூர்- சங்ககிரி- திருச்செங்கோடு- பரமத்தி சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், நேற்று நேரில் பார்வையிட்டு கலவையின் தடிமன், அடர்த்தி, உறுதித்தன்மை மற்றும் மேல்தள சாய்வு ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது, பருவமழை காலம் தொடங்க இருப்பதால், சாலை பணிகளை விரைந்து முடிக்க அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா, திருச்செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post சாலை பணிகளை அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article