திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை செல்லும் பிரதமர் மோடி. கச்சத்தீவினை மீட்க இலங்கை அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இடைக்காலமாக கச்சத்தீவில் மீன்பிடிக்க இலங்கை அரசிடம் அனுமதி பெற்றுத் தர வேண்டும். சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் டெல்லி மெட்ரோ நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளதால் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்காது. எனவே ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
வக்பு வாரிய மசோதாவை பாமக ஆதரிக்கவில்லை. இஸ்ஸாமியர்களின் சொத்துக்களை அவர்களே நிர்வகிக்க வேண்டும். அதுதான் பாமகவின் நிலைப்பாடு வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கைவிட கோரி தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தை பாமக உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்து தமிழக முதல்வர் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
The post வக்பு வாரிய சட்டத் திருத்தம் கண்டித்து முதல்வர் வழக்கு வரவேற்கத்தக்கது: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.