சாலவாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார்

4 months ago 16

மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி அந்த கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் தலைமை தாங்கினார். இதில், ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர். மேலும், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பொங்கல் பரிசு தொகுப்பினை கிராம மக்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த 1400 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், துணை தலைவர் நந்தா, நிர்வாகிகள் பாபுஷெரிப், அழகப்பன், சண்முகம், வெங்கடேசன், சந்தானம், தங்கராஜ், ஜெய்சங்கர், விஷ்ணு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் கௌதம் ராஜ், சகாதேவன், கண்ணபிரான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

 

The post சாலவாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article