'சார்பட்டா பரம்பரை 2' குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

4 months ago 19

சென்னை,

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இதையடுத்து சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை'இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்சன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆர்யா, 'பா.ரஞ்சித் இயக்கும் 'சார்பட்டா பரம்பரை 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரலில் தொடங்குகிறது' என்றார்.

'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Read Entire Article