சாம்பியன்ஸ் டிராபி: மோசமான சாதனையில் பும்ராவை பின்னுக்கு தள்ளிய முகமது ஷமி

3 hours ago 1

துபாய்,

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாத் ஷகீல் 62 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த போட்டியின் முதல் ஓவரை வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அதில் 5 வைடுகளை வீசினார். இதனையும் சேர்த்து முதல் ஓவரில் 11 பந்துகள் வீசினார்.

இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நீண்ட ஓவர் வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் (2017-ம் ஆண்டு) பும்ரா இதே பாகிஸ்தானுக்கு எதிராக 9 பந்துகள் வீசியதே மோசமான சாதனையாக இருந்தது. தற்போது அவரை பின்னுக்கு தள்ளி ஷமி இந்த மோசமான சாதனையில் முதலிடம் பிடித்துள்ளார்.

Read Entire Article