சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடும் - பயிற்சியாளர் ராப் வால்டர்

3 weeks ago 4

கேப்டவுன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என பாகிஸ்தான் கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

தென் ஆப்பிரிக்க அணி சொந்த மண்ணில் முழுமையாக ஒருநாள் தொடரை இழப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியிடமே சொந்த மண்ணில் தோற்று இருப்பது அந்த அணிக்கு எதிர்மறையான விமர்சனங்களை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எங்களது அணி உலக கோப்பை மற்றும் முக்கியமான தொடர்கள் வரும்போது சரியான நேரத்தில் பிரகாசிக்கும் என்று நன்றாகத் தெரியும். எங்கள் தோழர்கள் முன்னேற நினைக்கிறார்கள். அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

இதனை தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பைகளில் நாங்கள் பார்த்திருக்கிறோம். உலகக் கோப்பைக்கு முன்னோடியாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முன்னேறுவது மிகவும் அவசியம். அதன்படி தான் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடும்.

ஆனால் நாள் முடிவில் நாங்கள் வீரர்களின் தரத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். நிச்சயமாக இந்த தொடரில் தோற்ற குறியீடுகளை மாற்றுவது சவாலாக இருக்கும். இருப்பினும் நேரம் வரும்போது எங்கள் வீரர்களின் திறமை முழுவதுமாக வெளிவரும். வீரர்களின் தரத்தில் நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article