
லண்டன்,
8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்தியாவுக்கு உள்ள ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தேர்வு செய்துள்ளார். அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுலை தேர்வு செய்துள்ளார்.
தொடர்ந்து ஆல்ரவுண்டர்களாக அக்சர் படேல், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்த பீட்டர்சன், பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளார்.
கெவின் பீட்டர்சன் தேர்வு செய்த பிளேயிங் லெவன்:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை-கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
பென்ஞ்ச் வீரர்கள்: ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, வருண் சக்கவர்த்தி.