சாத்தூர் மெயின் சாலையில் போக்குவரத்து சிக்னல் செயல்படுமா?

2 days ago 3

 

சாத்தூர், மார்ச் 29: சாத்தூர் நகரில் அதிக போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையாக இருப்பது மெயின்ரோடு. இங்கு அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், பஸ் நிலையம், மதுரை பஸ் நிறுத்தம் ஆகிய பகுதியில் போக்குவரத்தை சீர் செய்வதற்கு காவல்துறையினர் சிக்னல்கள் அமைத்துள்ளனர். சிக்னல்கள் அமைக்கப்பட்ட நாட்களில் இருந்து செயல்படாமல் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது.

நகரில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், கனரக வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், போதியளவு போக்குவரத்து போலீசார் இல்லாததாலும் காலை, மாலை பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிகளவு வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

எனவே போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க சிக்னல்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.வாகன ஓட்டிகள் கூறுகையில், சாத்தூரில் முக்கிய சாலைகளில் சிக்னல்கள் செயல்படாமல் உள்ளன. இங்கு போக்குவரத்து போலீசாரும் இல்லாததால் அடிக்கடி டிராபிக்ஜாம், விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சிக்னல்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

The post சாத்தூர் மெயின் சாலையில் போக்குவரத்து சிக்னல் செயல்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article