
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊடகவியாளர் சவுக்கு சங்கர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து ஒரு கும்பல் மனித கழிவு மற்றும் சாக்கடை நீரை ஊற்றி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தூய்மை பணியாளர் போர்வையில் சவுக்கு சங்கர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் அராஜகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் இத்தகைய விபரீதங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையேல், ஜனநாயகத்தின் அடித்தளம் செல்லரித்து போய்விடும். இந்த தாக்குதல் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.