
ரோம்,
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), ஆன்ட்ரீவாவுடன் (ரஷியா) மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோகோ காப் 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் மிரா ஆன்ட்ரீவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.