
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கலக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் குமார்(25 வயது) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தினேஷ்குமாரை கைது செய்ய, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து அவர், தினேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தினேஷ்குமாரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.