'சலார் 2' எப்போது? - பிருத்விராஜ் கொடுத்த முக்கிய அப்டேட்

3 months ago 12

சென்னை,

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் 'சலார்'. இந்த படத்தை கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்றது. இதன் 2-ம் பாகமும் உருவாக உள்ளது.இந்நிலையில், சலார் 2 எப்போது என்ற கேள்விக்கு பிருத்விராஜ் பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். அப்படத்தினை முடித்துவிட்டு அனைவரும் இணைந்து 'சலார் 2' படத்தில் பணியாற்ற உள்ளோம்' என்றார்.

Read Entire Article