புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்சு சுக்லா. இந்திய விமானப்படையில் பைலட்டாக பணியாற்றிய இவர் பல்வேறு போர் விமானங்களில் சுமார் 2 ஆயிரம் மணி நேரத்திற்கு மேல் பறந்துள்ளார். இவரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக இஸ்ரோ தேர்வு செய்தது. இதையடுத்து பயிற்சிக்காக ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்திற்கு சென்றார். 2019 முதல் பயிற்சி பெற்று வரும் அவரை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்ப உள்ள டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க தேர்வு செய்துள்ளது. இந்த விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர். இந்த விண்கலத்தின் கமாண்டராக நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெகி விட்சல் செல்கிறார். இவருடன் இந்தியாவை சேர்ந்த சுபான்சு சுக்லா, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ் நியூஸ்கி, ஹங்கேரியை சேர்ந்த டிபோர் காபு ஆகியோர் செல்கிறார்கள். மே மாதம் அவர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
The post சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய வீரர் மே மாதம் பயணம்: நாசா அனுப்பி வைக்கிறது appeared first on Dinakaran.