சர்வதேச பலூன் திருவிழாவை துவக்கி வைத்தார்கள் அமைச்சர்கள்

3 hours ago 3

சென்னை: இன்று குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.இராஜேந்திரன் அவர்கள், ஆகியோர் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள திருவிடந்தையில் 10வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவினை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வின் போது சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாக்டர். சந்தர மோகன் B அவர்கள், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியார் பங்களிப்புடன் (Global Media Box) இணைந்து 10வது சர்வதேச பலூன் திருவிழா 2025 இனிதே துவங்கப்பெற்றது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு சுற்றுலா நாட்காட்டியின் ஒரு அடித்தளமாக சர்வதேச பலூன் திருவிழா மாறி உள்ளது. இது இந்தியாவின் ஒரே வருடாந்திர ஹாட் ஏர் (வெப்ப காற்று) பலூன் திருவிழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 10வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவை இந்த ஆண்டு கொண்டாடும் போது வானத்தில் வசீகரிக்கும் வண்ணங்கள் கொண்ட பலூன்கள் ஒரு அற்புதமான நிகழ்வாக இருக்கும்.

2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சர்வதேச பலூன் திருவிழா மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரம்மாண்டமான ஹாட் ஏர் பலூன்களை காட்சிப்படுத்தி உள்ளது.

* 2025 ஆம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்:-

இந்த ஆண்டின் 10வது சர்வதேச பலூன் திருவிழாவினை முதல் முறையாக மூன்று நகரங்களில் ஒவ்வொன்றிலும் தனித்துவமான அனுபவங்களை பெரும்வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் வரும் நாட்களில். ஜனவரி 10 முதல் 12 ஆம் தேதி வரை சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே உள்ள திருவிடந்தையிலும். ஜனவரி 14 முதல் 16 ஆம் தேதி வரை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி ரைட் கொங்குசிட்டியிலும். ஜனவரி 18 முதல் 19 ஆம் தேதி வரை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்திலும் நடைபெறும்.

* 10வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா 2025-ன் தனித்துவங்கள்:-

10வது சர்வதேச பலூன் திருவிழாவில் ஐரோப்பா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உட்பட 8-ற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஹாட் ஏர் பலூன்கள் சர்வதேச அளவில் பங்கேற்கின்றன. Baby Monster (Brazil), Hugo the Cheetah (Austria) Wes the Wolf மற்றும் Eli the Elephant (Uk) போன்ற சிறந்த கண்கவர் வடிவங்களை கொண்ட ஹாட் ஏர் பலூன்கள் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இடம்பெறுள்ளது.

சர்வதேச பலூன் திருவிழாவில் பங்கேற்கும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் ஹாட் ஏர் பலூன்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளவும் மறக்க முடியாத புகைப்படங்களை எடுத்த மகிழ மினி பலூன் மாதிரிகள் உள்ளன.
ஹாட் ஏர் பலூன் பைலட்டிங்கில் ஆர்வமுள்ள பலூன் ஆப்ரேட்டர்கள் மூன்று நகரங்களில் உறுப்பினர்களாக பங்கேற்று எதிர்கால ஹாட் ஏர் பலூன் தொழில் வாய்ப்புகள் பற்றி அறிந்துக் கொள்ளலாம். ஹாட் ஏர் பலூன்களின் செயல்பாடுகள் அமைதியான காற்று மற்றும் வானிலை காரணங்களுக்கு உட்பட்டது. சான்றிளிக்கப்பட்ட விமானிகளால் இறுதி முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

* உள்நாட்டு சுற்றுலாவினை ஊக்கப்படுத்துதல்:-

தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா கலாச்சாரம், சாகசம் மற்றும் உலகாளவிய சுற்றுலா ஆகியவற்றின் கொண்டாட்டம் ஆகும். உலகெங்கிலும் உள்ள ஹாட் ஏர் பலூன் திருவிழாக்கள் பெரும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. மேலும் தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா உள்நாட்டு சுற்றுலாவை தொடர்ந்து மேம்படுத்துகிறது. நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களையும் ஈர்க்கிறது.

ஹாட் ஏர் பலூன்கள் விமானம் என வகைப்படுத்தப்பட்டு கடுமையான சிவில் விமானப் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளின் கீழ் செயல்படும் ஒவ்வொரு நாளும் பலூன்கள் இயக்கப்படுவது அப்பகுதியில் நிலவும் வானிலை நிலைமைகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

ஹாட் ஏர் பலூன் திருவிழாக்கள் முற்றிலும் இயற்கை காலநிலையினை சார்ந்திருக்கும். அமைதியான காற்று மற்றும் சாதகமான வானிலை ஆகியவை பாதுகாப்பான நடவடிக்கைகளுக்கு முக்கியமானவை. மேலும் விமானம் மற்றும் டெதரிங் தொடர்பான அனைத்து முடிவுகளும் சான்றிளிக்கப்பட்ட விமானிகளால் எடுக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பு மற்றும் டெதரிங் உறுதிப்படுத்துவதில் அவர்களின் தீர்ப்பே இறுதியானது. மேலும் பலூன் திருவிழாவினை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.tnibf என்ற இணையதள முகவரியை காணவும்.

இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுபினர் ச.அரவிந்த் ரமேஷ், அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் நாராயண ஷர்மா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.எல்.ஆர்.இதயவர்மன், அவர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சர்வதேச பலூன் திருவிழாவை துவக்கி வைத்தார்கள் அமைச்சர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article