சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் சிறப்பாக பணியாற்றிய வன அலுவலர்களுக்கு விருது: அமைச்சர் வழங்கினார்

3 hours ago 2

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மே 22ம் தேதி சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு வனத்துறை சார்பில் நேற்று கருத்தரங்கு நடந்தது. இதையொட்டி வனப்பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள், அறிக்கைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.தமிழ்நாடு வனத்துறையின் ஆராய்ச்சிப் பிரிவின் வன மரபியல் கோட்டத்தினால் அடையாளம் காணப்பட்டு சேகரிக்கப்பட்ட அரிய பூர்வீக புல் விதைகளையும் அவர் வெளியிட்டார்.

பல்வேறு பணிகளில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றிய வன அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ​​சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள் னிவாஸ் ரெட்டி, மிதா பானர்ஜி, ராகேஷ் குமார் டோக்ரா, தெபாசிஸ் ஜனா, அன்வர்தீன், கீதாஞ்சலி மற்றும் இணை இயக்குநர் தமிழ் மொழி அமுது மற்றும் சங்கத் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

The post சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் சிறப்பாக பணியாற்றிய வன அலுவலர்களுக்கு விருது: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article