தொண்டி,பிப்.10: தொண்டி அருகே நம்புதாளையில் சரக்கு வாகனம் டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியானார். தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த அசரப் அலி மகன் முகமது நபில்(21). இவர், நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் காசியர் குளம் அருகே டூவீலரில் சென்றபோது, ராமநாதபுரத்தில் இருந்து இறால் பண்ணைக்கு தீவனம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியது.
இதில் சம்பவ இடத்திலையே முகமது நபில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்த நம்புதாளை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரக்கு வாகன டிரைவர் உத்திரகோசமங்கை அருகே உள்ள நல்லாங்குடியை சேர்ந்த ராஜேஷ்(39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.