சம்பள பிரச்னையில் இருதரப்பு மோதல் 3 பேர் கைது

6 months ago 27

ஓசூர், அக்.15: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்குமார் நாயக் (33). இவர் ஓசூர் பேடரப்பள்ளியில் தங்கி ஒப்பந்ததாரராக வேலை செய்து வந்தார். இவரிடம் பீகார் மாநிலத்தை சேர்ந்த முனீந்தர் குமார் சிங் (43), விகாஷ்குமார் (30) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2 மாதமாக பிரகாஷ்குமார் நாயக், சம்பளம் கொடுக்கவில்லை. இது குறித்து அவரிடம் வேலை செய்த முனீந்தர் குமார் சிங், விகாஷ்குமார் ஆகியோர் கேட்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில், பிரகாஷ்குமார் நாயக்கை தாக்கினார். இதில் காயமடைந்த பிரகாஷ்குமார் நாயக், போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் முனீந்தர் குமார் சிங், விகாஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதே போல, முனீந்தர் குமார் சிங், தன்னை தாக்கியதாக அளித்த புகாரின் பேரில், பிரகாஷ்குமார் நாயக்கை போலீசார் கைது செய்தனர்.

The post சம்பள பிரச்னையில் இருதரப்பு மோதல் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article