திருப்பரங்குன்றம்: மதுரை அருகே திருநகரில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமாகா தலைவர் ஜிகே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழ் மொழியை உலகளவில் பரப்புவது நமது கடமை. ஆனால், தமிழகத்தில் மாணவர்கள் விருப்பப்பட்ட மூன்றாவது மொழியை படிக்க அரசே தடையாக இருந்தால், நமது செம்மொழியை மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் எப்படி படிக்க முன்வருவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தமாகா தொடங்கிவிட்டது.
சென்னை மாநகரத்தில் முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அடுத்ததாக, தமிழகம் எங்கும் கூட்டங்கள் நடத்தப்படும். கட்சி தொய்வாக இருக்கும் இடங்களில் வலு சேர்க்கும் முயற்சிகள் எடுக்கப்படும். கூட்டணியை பலப்படுத்துவோம். சமூக வலைத்தளங்களில் வரும் சர்ச்சைக்குரிய பதிவுகளை கட்டுப்படுத்த, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் ஒரு வரலாறு. அவரது ஆட்சியை யாரும் மறைக்கவோ, திரும்பக் கொண்டு வரவோ முடியாது. இவ்வாறு தெரிவித்தார்.
The post சமூக வலைத்தளங்களில் வரும் சர்ச்சைப் பதிவுகளை கட்டுப்படுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஜிகே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.