சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதாவது, கடந்த இரண்டு வருடங்களாகவே நான் நான் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். அவ்வாறு நிறுத்திவிட்டதால் எனக்கு நல்ல விதமான தெளிவு கிடைத்திருக்கிறது.
தற்போது எல்லாம் சமூக வலைதளங்களில் அவர் அவர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனால் சரியான முடிவுகளை என்னால் எடுக்க முடியவில்லை. நான் குழம்பி விடுகிறேன். தற்போது சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை நிறுத்தியதில் இருந்து யோசித்து நான் தெளிவான முடிவுகளை எடுக்கிறேன்" என்று கூறியுள்ளார்.