சமூக வலைதளங்களில் மீம்கள் வெளியிடும் அரசியல் கட்சிகள்: வளர்ச்சிக்காக தேர்தலை சந்திப்பதாக காங்கிரஸ் கருத்து

2 hours ago 1

டெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 15 நாட்களே உள்ள நிலையில், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டுகின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மீம்கள் மூலம் விமர்சனங்களை அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி தீவிரமடைந்துள்ளது.

தேர்தல் பரப்புரைக்காக மீம்கள், மீம் வீடியோக்கள் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டு வருகின்றனர். கல்காஜி தொகுதியில் தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதலமைச்சர் அதிஷியை எதிர்த்து களம் இறங்கியுள்ள பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி, அவதூறு பரப்புவதில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள மீம் வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல பாஜக-வும், ஆம் ஆத்மி கட்சியையும் அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவாலையும் விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மீம்களை வெளியிட்டு வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியும், பாஜக-வும் தாங்கள் உருவாக்கிய பிரச்சனைகள் தொடர்பாக தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு கொள்வதாக குற்றச்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி தாங்கள் வளர்ச்சியை முன்வைத்து தேர்தலை சந்திப்பதாக தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பரப்புரைக்கு செல்ல உள்ளனர். 3 கட்சிகளின் வேட்பாளர்களும், உள்ளூர் தலைவர்களும் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டதால் டெல்லி தேர்தல் களத்தில் அனல் வீச தொடங்கியுள்ளது.

The post சமூக வலைதளங்களில் மீம்கள் வெளியிடும் அரசியல் கட்சிகள்: வளர்ச்சிக்காக தேர்தலை சந்திப்பதாக காங்கிரஸ் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article