விழுப்புரம்: “என்னுடைய உழைப்பால், போராட்டத்தால், வன்னியர் சமூகம் மட்டுமின்றி எம்பிசி பிரிவில் உள்ள 115 சமூகத்தினரும் பயன் பெற்றுள்ளனர். சமூக நீதியை பற்றி என்னால் மட்டுமே பேச முடியும். மற்றவர்களால் பேச முடியாது, அதைப்பற்றி அவர்களுக்கு தெரியாது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
உட்கட்சி மோதலில், பாமக நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைத்து விடுத்திருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் கடந்த 16-ம் தேதி மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டமும், மறுநாள் (மே 17) மகளிரணி, இளைஞர் அணி, மாணவரணி கூட்டமும் மற்றும் 19-ம் தேதி வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது.