மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட்டில் ஒரு பள்ளிக்கு வெளியே உக்ரைன் அதிபரின் மாஜி ஆலோசகர் ஆண்ட்ரி போர்ட்னோவ் (52) சில மர்ம நபர்களால் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது. இந்த சம்பவம் நேற்று காலை 9.15 மணி அளவில் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அருகில் வனப்பகுதியில் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. போர்ட்னோவ் கடந்த 2010 முதல் 2014 வரையிலும் உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச்சின் நெருங்கிய ஆலோசகராக இருந்தவர். போர்ட்னோவ் ரஷ்யாவின் ஆதரவாளராக இருந்தவர்.
The post உக்ரைன் மாஜி அதிபரின் ஆலோசகர் ஸ்பெயினில் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.