சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக் கடன் செய்வது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு அப்படி நேர்த்திக் கடன் செய்யச் சென்ற முஸ்லிம் ஒருவரைக் காவல்துறையினர் தடுத்துள்ளனர். அதுதான் இந்தப் பிரச்னைக்கான மூலக் காரணம் எனத் தெரிகிறது.
எப்படியாவது தமிழ்நாட்டிலும் மதக் கலவரத்தை மூட்டி தமிழர்களின் ஒற்றுமையைக் கெடுக்க எண்ணும் சனாதனக் கும்பல் இப்போது திருப்பரங்குன்றத்தில் ரத்தக் களறியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. தமிழ்நாட்டின் சமய நல்லிணக்கச் சூழலைக் கெடுக்க முயற்சிக்கும் நாசகார சக்திகளை தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சி அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.