பாங்காக்: மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து உட்பட 8 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மேலும் 4 அணிகளை தேர்வு செய்வதற்காக, ஆசியா தகுதிச்சுற்று போட்டி, பாங்காக்கில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் அணிகள் இடையே நேற்று நடந்தது. முதலில் ஆடிய எமிரேட்ஸ் அணி, 16 ஓவர் முடிவில், விக்கெட் இழப்பின்றி 192 ரன் குவித்தது. அப்போது எந்நேரமும் மழை வரலாம் என்ற நிலை காணப்பட்டது. அதனால், 17வது ஓவரின் துவக்கத்தில், ஏற்கனவே களத்தில் இருந்த ஈஸா ஓஜா (113 ரன்), தீர்த்தா சதீஷ் (74 ரன்) உட்பட 10 வீராங்கனைகளும் பந்துகளை சந்திக்காமல் ‘ரிடையர்ட் அவுட்’ முறையில் அவுட் ஆகினர். பின்னர் ஆடிய கத்தார் அணி, 11.1 ஓவரில் 29 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதனால், 163 ரன் வித்தியாசத்தில் எமிரேட்ஸ் மகத்தான வெற்றி பெற்றது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 10 வீராங்கனைகளும் ரிடையர்ட் அவுட் ஆனது இதுவே முதல் முறை.
The post ஆசியா தகுதிச்சுற்று டி20: 10 வீராங்கனைகள் ரிடையர்ட் அவுட்; கிரிக்கெட் வரலாற்றில் இது புதுசு appeared first on Dinakaran.