சமாதானம் பேச அழைத்த இளைஞர் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க கோரி சாலைமறியல் போராட்டம்.

6 months ago 21
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூரார்பாளையத்தில் இளைஞர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒருதரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தெருவில், இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற 2 நபர்களை அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கண்டித்த போது இருதரப்பிற்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சமாதானம் பேசுவதாக அழைத்து சத்தியமூர்த்தியை ஒரு தரப்பினர் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சத்தியமூர்த்தி தரப்பினர் போராட்டம் நடத்தினர்.
Read Entire Article