தூத்துக்குடி, பிப். 7: தூத்துக்குடி தென்பாகம் எஸ்ஐ முத்தமிழரசன் மற்றும் போலீசார், தூத்துக்குடி – பாளை ரோட்டில் எப்சிஐ குடோன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து விசாரிக்க முயன்றனர். அப்போது அவர்களில் ஒருவன் தன் முதுகில் மறைத்து வைத்திருந்த சுமார் 3 அடி நீளமுள்ள அரிவாளை எடுத்துக்காட்டி மிரட்டியுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பாண்டி மகன் அருண்குமார் என்ற அருண் (23), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஜேம்ஸ் ராஜ் மகன் தினேஷ் (23) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.