8 அலங்கார புஷ்பப்பல்லக்குகள் பவனி இன்னிசை கச்சேரிகளுடன் விழா களைக்கட்டுகிறது வேலூரில் சித்ரா பவுர்ணமி கோலாகலம்

2 days ago 3

வேலூர், மே 12: வேலூரில் சித்ரா பவுர்ணமி புஷ்பப்பல்லக்கு விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட 8 புஷ்பப்பல்லக்குகளில் முக்கிய கோயில்களின் உற்சவ மூர்த்திகள் உலா வருகின்றனர்.

வேலூர் நகரின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சித்ரா பவுர்ணமி புஷ்பப்பல்லக்கு விழா இன்று இரவு நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று இரவு வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர், வேலூர் அரிசி மண்டி வியாபாரிகள் சார்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகர், வேலூர் வெல்ல மண்டி வியாபாரிகள் சார்பில் தோட்டப்பாளையம் அபயாம்பிகை சமேத தாரகேஸ்வரர், மோட்டார் வாகன பணிமனை உரிமையாளர்கள் சார்பில் காட்பாடி சாலை  விஷ்ணு துர்க்கையம்மன், வாணியர் வீதி கனகதுர்க்கையம்மன், செல்வ விநாயகர், புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சார்பில் லாங்கு பஜார் வேம்புலியம்மன், புஷ்ப தொழிலாளர்கள் சார்பில் அரசமரப்பேட்டை லட்சுமி நாராயண பெருமாள், வேலப்பாடி மக்கள் சார்பில் வேலூர் கிராம தேவதை ஆனைகுளத்தம்மன் என 8 புஷ்பப்பல்லக்குகள் அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்டு மண்டி வீதியில் ஒன்றிணைந்து மண்டி வீதி, லாங்கு பஜார், கமிசரி பஜார், பில்டர்பெட் சாலை, திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், அண்ணா கலையரங்கம் வழியாக வேலூர் கோட்டை மைதானத்தை அடைகின்றன. அங்கு வாணவேடிக்கைகள் நடக்கிறது.
தொடர்ந்து பக்தர்கள் அனைத்து புஷ்பப்பல்லக்குகளிலும் வழிபாடு செய்கின்றனர். நாளை காலை 6 மணியளவில் புஷ்பப்பல்லக்குகள் தாங்கள் புறப்பட்ட நிலைகளுக்கு திரும்பி செல்கின்றன.

மேலும் புஷ்பப்பல்லக்கு விழாவை முன்னிட்டு புஷ்பப்பல்லக்குகளை ஏற்பாடு செய்துள்ள அனைத்து விழாக்குழுவினர் சார்பிலும் இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

The post 8 அலங்கார புஷ்பப்பல்லக்குகள் பவனி இன்னிசை கச்சேரிகளுடன் விழா களைக்கட்டுகிறது வேலூரில் சித்ரா பவுர்ணமி கோலாகலம் appeared first on Dinakaran.

Read Entire Article