
ராய்ப்பூர்,
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கிஸ்தாராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது,
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மாநிலத்தில் ஏற்பட்ட தனித்தனி மோதல்களில் 83 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.