'கோர்ட்' படத்தின் டிரெய்லர் அப்டேட்

3 hours ago 1

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. நானியின் 30-வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது.

இதற்கிடையில் நடிகர் நானி, இயக்குனர் ராம் ஜெகதீஷுடன் இணைந்து 'கோர்ட்' என்ற படத்தை உருவாகியுள்ளார். இப்படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

நடிகர் நானி தயாரித்த 'கோர்ட்' படம் மார்ச் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டிரெய்லர் வருகிற 7-ந் தேதி வெளியாக உள்ளது. 

Truth will always find its way. Nothing will or nothing can change that. This film and this team will make you proud on March 14th. Trailer on 7th. #Court https://t.co/YA5lGfj6ZY pic.twitter.com/FIs8yzGPiE

— Nani (@NameisNani) March 1, 2025
Read Entire Article